1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் 9 முதல்வராக பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு..?

1

லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசல் பிரதேசம் சிக்கிம் மாநிலங்களிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றன. நமது அண்டை மாநிலமான ஆந்திராவுக்கு மே 13ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடத்தப்பட்டன.ஆந்திராவைப் பொறுத்தவரை அங்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒஸ்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கிறது. அவருக்கு எதிராக சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார். பாஜக மற்றும் பவன் கல்யாண் கட்சியுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு களமிறங்குகிறார்.

நேற்று ஆந்திரா சட்டசபைத் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே பெரும்பாலான தொகுதிகளில் சந்திரபாபு நாயுடு கட்சி முன்னிலையில் இருக்கிறது. ஆந்திர மாநிலச் சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக அம்மாநில முதல்வராகப் பதவியேற்க உள்ளார். ஏற்கனவே அங்கு இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.சந்திரபாபு நாயுடு வரும் ஜூன் 9இல் அமராவதியில் பதவியேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பிரதமர் மோடியும் சந்திரபாபு நாயுடுவை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு ஆந்திராவில் ஆட்சியைப் பிடித்ததற்கு வாழ்த்துக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like