ஆந்திர முதல்வராக 12ம் தேதி பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு..!
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 134 இடங்களில் வெற்றி பெற்று, தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
இதற்காக, அமராவதியில் பிரமாண்டமான அளவில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.விழாவில், பிரதமர் மோடி மற்றும் முக்கியத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என தெலுங்கு தேசம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் 9ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், 12ஆம் தேதி பதவியேற்கிறார் சந்திராபு நாயுடு. மோடியின் பதவியேற்பு நிகழ்ச்சியையொட்டி, சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா தள்ளிவைப்பு என தகவல் வெளியாகியுள்ளது