ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு..!
ஆந்திர மாநிலம் கன்னாவரம் பகுதியில் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. அதில் நான்காவது முறையாக ஆந்திர முதல்வராக பதவி ஏற்றார் சந்திரபாபு நாயுடு.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த், பாஜக தேசிய தலைவர் நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் ஆளுநரும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன், நடிகர்கள் சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, ராம் சரண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற பின்னர் அதன் கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆந்திர மாநில அமைச்சராக பதவி ஏற்று கொண்டார். மேலும் சந்திரபாபு நாயுடு மகன் நாரா லோகேஷும் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.
மொத்தமாக 23 அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.