ஊரடங்கால் சிக்கி தவிக்கும் சந்திரபாபு நாயுடு !!

ஊரடங்கால் சிக்கி தவிக்கும் சந்திரபாபு நாயுடு !!

ஊரடங்கால் சிக்கி தவிக்கும் சந்திரபாபு நாயுடு !!
X

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு சென்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்.

ஒருவேளை அனுமதி பெற்று ஆந்திர எல்லைக்குள் வந்தால் அம்மாநில அரசு சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் வரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தக்கூடும். மேலும் ஆந்திரா வந்துவிட்டு மீண்டும் ஹைதராபாத் சென்றாலும் தெலங்கானா அரசால் 14 நாட்கள் தனிமைப்படுத்தக்கூடும். இதனால் ஹைதராபாத் சென்ற சந்திரபாபு நாயுடு, அங்குள்ள வீட்டில் இருந்தபடியே ஆந்திராவில் உள்ள தனது கட்சி நிர்வாகிகளிடம் காணொலி காட்சி மூலம் பேசி வருகிறார். 

Newstm.in

Next Story
Share it