கேரளாவுக்கு அள்ளிக்கொடுத்த சந்திரபாபு நாயுடு..! எத்தனை கோடி கொடுத்தார் தெரியுமா ?
கடந்த மாதம் 30ஆம் தேதி கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு வயநாட்டில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலச்சரிவில் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன.
நூற்றுக்கணக்கானோர் மண்ணில் உயிருடன் புதைந்தனர். அவர்களின் 400 க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன காணாமல் போன 200க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தற்போது வரை தொடர்ந்து வருகிறது. ராணுவத்தினர் விடை பெற்ற நிலையிலும் பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு பல்வேறு மாநில அரசுகளும் சினிமா நட்சத்திரங்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டுக்கு 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். இந்த பணம் கேரளா மாநில முதலமைச்சரின் பேரிடர் நிவாரணத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. நிலச்சரிவு பேரழிவுக்கு பிறகு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கேரளாவுக்கு உதவுவதாக உறுதி அளித்ததாக முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த பணம் உயிர் பிழைத்தவர்களின் மறுவாழ்வுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநில அரசுக்கு தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது