இறுதி ஊர்வலத்தில் ராமோஜி ராவின் உடலை தூக்கி வந்து சந்திரபாபு நாயுடு..!
இந்தியாவின் மிகப்பெரிய சினிமா தளமான ராமோஜி பிலிம் சிட்டி உருவாக்கிய பெருமைக்குரியவர் ராமோஜி ராவ். அது மட்டுமல்லாது, ஈநாடு பத்திரிகை, ஈடிவி டெலிவிஷன் மற்றும் ஈடிவி பாரத் நெட்வொர்க் போன்ற நிறுவனங்களை தொடங்கி ஊடக உலகிற்கு பல்வேறு தொண்டுகளை செய்துள்ளார்.ராமோஜி பிலிம் சிட்டியில் வைக்கப்பட்டு இருந்த ராமோஜி ராவின் உடலுக்கு அலுவலக ஊழியர்கள், பொது மக்கள், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர்கள் பவன் கல்யாண், சிரஞ்சீவி, நாகர்ஜூனா, ஜெகபதி பாபு, இயக்குநர் ராஜமெளலி, ரவி பிரகாஷ், பிரம்மானந்தம் உள்ளிட்ட திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர்.ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து இன்று (ஜூன்.9) காலை ராமோஜி ராவுக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது. வீட்டில் இருந்து ஊர்வலமாக ராமோஜி பிலிம் சிட்டி, ஈடிவி பாரத், ஈடிவி, ஈநாடு பத்திரிகை அலுவலகங்கள் முன் எடுத்துச் செல்லப்பட்ட அவரது உடலுக்கு ஊழியர்கள் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ராமோஜி ராவின் உடலுக்கு அரசு மாரியாதை வழங்கப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, தெலங்கனா அமைச்சர்கள் தும்மலநாகேஷ்வர ராவ், சீத்தக்கா, முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி முன்னாள் அமைச்சர்கள், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள், மூத்த திரைப் பிரபலம் முரளி மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர்.
முதல்வராக பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு, ராமோஜி ராவின் உடலை தனது தோளில் தூக்கிவந்து தகன மேடையில் வைத்தார். அதன்பின், ராமோஜி ராவின் மூத்த மகன் கிரன் தனது தந்தைக்கு இறுதி சடங்குகளை மேற்கொண்டார். இதையடுத்து, சந்தன கட்டைகள் வைத்து அரசு மரியாதையுடன் ராமோஜி ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
Telangana: TDP chief N Chandrababu Naidu attends funeral of Eenadu and Ramoji Film City founder Ramoji Rao, in Hyderabad.#Varta24live #Varta24telugu #NareshVashistha @ncbn pic.twitter.com/H7L9TvbEYO
— Varta24 Telugu (@Varta24Telugu) June 9, 2024