1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!


தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் இன்று அதிகாலை தொடங்கி பல்வேறு இடங்களில் லேசான மழைபெய்து வருகிறது.

வடபழனி, கிண்டி,அடையாறு மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், வண்டலூர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது.

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!!

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, கத்திப்பாரா, போரூர், நந்தம்பாக்கம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

newstm.in

Trending News

Latest News

You May Like