தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னையை தவிர செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், அரியலூர் மாவட்டங்களில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கனமழை பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவாசிய சேவை வழங்கும் அலுவலகங்கள் இயங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நேற்று சென்னையில் சுமார் 10 மணி நேரம் பெய்த கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
அதே நேரத்தில் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியை சென்னை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in