1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டத்தில் நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் !!

இந்த மாவட்டத்தில் நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் !!

தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழக வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளையும்(செவ்வாய்க்கிழமை) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. குறிப்பாக,சென்னையிலும் நாளை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டத்தில் நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் !!

மேலும்,திருவள்ளூர் மாவட்டதில் இன்று ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இன்றும்,நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த மாவட்டத்தில் நாளையும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் !!

ஜனவரி 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஜனவரி 20 மற்றும் 21ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக அம்பத்தூரில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like