சாம்பியன்ஸ் டிராபி: நியூஸியுடன் மோதல் ; இந்தியா 249/9..!

ஐ.சி.சி., சார்பில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) பாகிஸ்தானில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கின்றன. இந்நிலையில் இன்று (மார்ச்.,02) 'ஏ' பிரிவில் இடம் பெற்ற இந்திய அணி, இன்று இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அதன்படி, டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. தமிழகத்தை சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவத்தி அணியில் சேர்க்கப்பட்டார்.
துவக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 2 ரன்னிலும் , கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
விராட் கோலி 11 ரன்கள் எடுத்து இருந்த போது, அவர் அடித்த பந்தை அந்தரத்தில் ஒற்றைக்கையில் பிடித்து அவுட் ஆக்கினார் நியூசி., வீரர் கெலென் பிலிப்ஸ். மொத்த ஸ்டேடியமும் அதிர்ச்சி அடைந்தது.
இதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் நிதானமாக விளையாடினார். ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்து 79 ரன்னில் அவுட்டானார். அக்சர் படேல் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 23, ரவிந்திர ஜடேஜா 16 ரன்னிலும், ஹர்திக் பாண்டியா 45 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். முகமது ஷமி 5 ரன் எடுத்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணியின் மேட் ஹென்றி 4 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றி பெற 250 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.