1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசுக்கு சவால்..! நாங்க ஆட்சிக்கு வந்தா செய்யப்போற முதல் வேலை இதான்..

1

ஜம்மு காஷ்மீரில் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து தற்போதுதான் தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு 3 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 24 தொகுதிகளுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும் 2 ஆம் கட்டமாக 26 தொகுதிகளுக்கு செப்டம்பர் 25 ஆம் தேதியும் மூன்றாம் கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்டோபர் ஒன்றாம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.

20218 ஆம் ஆண்டு ஜூனில் பாஜக, மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றது. இதையடுத்து ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் 2019 ஆம் ஆண்டு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது. மேலும் யூனியன் பிரதேசமாக மறுசீரமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் முதலாவது சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளித்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகும் நடைபெற உள்ள முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான உமர் அப்துல்லா,ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட விவகாலரத்தை கையில் எடுத்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த உமர் அப்துல்லா, தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றுவோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் தாங்கள் லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் ஆனால் அது ஏற்கப்படவில்லை என்றும், தற்போது தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் கமிஷனின் முடிவை வரவேற்பதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

Trending News

Latest News

You May Like