4 கோடி செலுத்தி சக்ரா படம் ஓடிடி -யில் வெளியிடலாம் !!

நடிகர் விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் விரைவில் ஓ.டி.டி. இணையதளத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தடை கோரி டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் ரவீந்திரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
வழக்கு விசாரணையின் போது, நடிகர் விஷால், தமன்னா ஆகியோர் நடித்த ஆக்ஷன் படம் தியேட்டரில் வெளியிடும் போது ரூ.20 கோடிக்கு குறைவாக வசூலானால், விஷால் ரூ.8½ கோடி திருப்பித்தர வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் இந்த படம், ஒப்பந்தப்படி வசூலாகவில்லை. தயாரிப்பாளருக்கு, விஷால் தர வேண்டிய பணத்தை தரவில்லை.
இதனால், ஆனந்தன் என்ற இயக்குநர் மனுதாரர் ரவீந்திரனிடம் ஒரு கதையை சொல்லி அதை படமாக எடுக்க ஒப்பந்தம் செய்தார். ஆனால், அதே கதையை வைத்து சக்ரா என்ற பெயரில் வேறு ஒரு தயாரிப்பு நிறுவனம் மூலம் படம் எடுத்துள்ளார். அதில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். எனவே இந்த படத்தை ஓ.டி.டியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சக்ரா படத்தை ஓ.டி.டி. இணையதளம் வாயிலாக வெளியிட 30-ம் தேதி வரை தடை விதித்தார். இந்த பிரச்சினையை இருதரப்பும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, சக்ரா படத்தை ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி வெளியிடலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.
newstm.in