மதுரை விமான நிலையம் அருகே இளம்பெண்ணிடம் செயின் பறிப்பு..!

மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகர் நாகப்பா நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 4 - ம் தேதி இரவு, இளம்பெண் ஒருவர் வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த ஒரு நபர், அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்டு, துணியால் வாயை மூடி, அவர் அணிந்திருந்த வெள்ளி செயினை பறித்து சென்றுள்ளார்.
அந்த பெண் கூச்சலிட்டதால் , அருகில் இருந்தவர்கள் அந்த நபரை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர் தப்பி ஓடிவிட்டார். இந்த வழிப்பறி சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதற்கட்ட விசாரணையில், அந்த பெண் அணிந்திருந்தது வெள்ளி செயின் என்பது தெரியவந்துள்ளது. அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை. இருப்பினும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அவனியாபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பெண்ணிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மதுரை விமான நிலையம் அருகே உள்ள மண்டல நகர பகுதியில் நேற்று இரவு 8:15 மணி அளவில் தனியாகச் சென்ற இளம் பெண்ணிடம் முள்புதருக்குள் காத்திருந்த மர்ம நபர் செயின் பறித்து சென்றுள்ளார். #CCTVWatch #Madurai #Airport #Woman #chainsnatching #OITamil pic.twitter.com/JKgv6UJ68t
— Oneindia Tamil (@thatsTamil) April 5, 2025