1. Home
  2. தமிழ்நாடு

தமிழக ஆளுநர் மாற்ற மத்திய அரசு முடிவு?

Q

கடந்த 2021ம் ஆண்டு முதல் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பணியாற்றி வருகிறார். அவர் மீது தி.மு.க., மற்றும் கூட்டணிக் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். ஏற்கனவே சில முறை, கவர்னரை மாற்ற வேண்டும் என்று தி.மு.க., சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன், இந்தி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, சில வரிகள் தவிர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு கவர்னரை குற்றம் சாட்டிய தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் கவர்னர் மாற்றப்பட வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

ஆர்.என்.ரவி மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் ராணுவ தளபதியுமான ஜெனரல் வி.கே.சிங் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like