1. Home
  2. தமிழ்நாடு

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!

1

மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன் அரசியல் பிரிவான புரட்சிகர மக்கள் முன்னணி (RPF), ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி (UNLF), மணிப்பூர் மக்கள் ராணுவம் (MPA) ஆகிய அமைப்புகளுக்கு மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது.

இந்தியாவின் இறையாண்மையைப் பின்பற்றவில்லை என்பதால், அந்த நான்கு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மெய்தி இன மக்களிடையே வன்முறை நிகழ்ந்து வரும் நிலையில் நான்கு அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடைச் செய்யப்பட்ட அமைப்புகள் அனைத்தும் மெய்தி போராளி அமைப்புகள் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like