1. Home
  2. தமிழ்நாடு

மத்திய அரசின் சூப்பர் திட்டம்..! தினமும் ரூ. 7 முதலீட்டில் வீடு தேடி மாத மாதம் வரும் ரூ.5000..!

1

வயதானவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கக்கூடிய உத்தரவாதமான திட்டமாக உள்ளது  மத்திய அரசின் 'அடல் பென்ஷன் யோஜனா திட்டம்.இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்கள் 60 வயது வரை பணம் செலுத்தி சேமிக்க முடியும்.

பயனர்கள் செலுத்தும் தொகையை பொறுத்தே அவர்களது 60 வயதுக்கு பிறகு ரூ.100/- முதல் ரூ.5000/- வரை பென்ஷன் தொகை வழங்கப்படும். அதற்கு வங்கிக் கணக்கு அல்லது தபால் அலுவலக கணக்கு இருப்பது கட்டாயமானதாகும்.  

18 வயதான ஒருவர் தினமும் வெறும் 7 ரூபாய் வீதம் மாதத்திற்கு ரூ. 210 என சேமித்து வந்தாலே போதும். இத்திட்டத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் என 60 வயதாகும் போது ஒருவர் ஓய்வூதியமாக பெற முடியும்.

பிரீமியம் செலுத்துதை பொறுத்து பென்சன் தொகை அதிகரிக்கும். அதே மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெறுவதற்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 626 செலுத்த வேண்டும். 6 மாதங்களுக்கு ஒருமுறை முதலீடு செய்ய விரும்பினால், 1,239 ரூபாய் செலுத்த வேண்டும். இதே திட்டத்தில் மாதந்தோறும் ஓய்வூதியமாக ரூ.1,000 பெற விரும்பினால், ஒவ்வொரு மாதமும் 18 வயதில் இருந்து ரூ.42 செலுத்த வேண்டும்.

முதலீட்டாளர் திடீரென இறந்து விட்டால், அவரின் வாழ்க்கை துணைக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். அல்லது இருவரும் இரண்டு விட்டால், சந்தாதாரரின் நாமினிக்கு அந்த பென்ஷன் தொகை கொடுக்கப்படும்.

பென்ஷனை அதிகரித்துக் கொள்ளும் விதமாக இந்த திட்டத்தில் அதிக தொகையை கட்டும் வசதியும் உள்ளது. மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் வங்கி கணக்கிலிருந்து ஆட்டோ டெபிட் வசதி மூலம் சந்தா செலுத்தும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.

பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், தபால் அலுவலகங்களில் அடல் பென்ஷன் திட்டத்தை நீங்கள் ஆரம்பிக்கலாம். ஆன்லைன் மூலமும் நீங்கள் கணக்கை துவங்கலாம். இதற்கு வங்கிக்கணக்கு, ஆதார் கார்டு போன்றவை ஆவணமாக வழங்க வேண்டும்.
 

Trending News

Latest News

You May Like