சூப்பரான மத்திய அரசு திட்டம்..! 500 ரூபாய் தினமும் வேணுமா?
பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். கைவினை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களது நிலையை உயர்த்தவும், அறிமுகம் செய்யப்பட்ட விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின்கீழ், கைவினை கலைஞர்கள் மற்றும் கைவினை தொழிலாளர்களுக்கு அடமானம் இல்லாத கடன் வழங்கப்படுகிறது.
அத்துடன், திறனுக்கான பயிற்சி, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்க தொகைகள், சந்தை தொடர்பான ஆதரவு மற்றும் நவீன கருவிகள் போன்றவைகளும் இந்த திட்டம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பிரதமரின் விஸ்வகர்மா https://pmvishwakarma.gov.in/ என்ற போர்டலில் சென்று இந்த திடடத்தில், இணையலாம்.
ஆனால், 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட நபர்கள் விஸ்வகர்மா திட்டத்தில் இணைய முடியும். பொற்கொல்லர், கல் தச்சர்கள், காலணி செய்பவர், காலணி தைப்பவர், குயவர், தச்சர், சிற்பிகள், முடி திருத்தும் தொழிலாளர், கொத்தனார், கயிறு செய்பவர், டெய்லர், சலவைத் தொழிலாளர், பூமாலைகள் கட்டுபவர் உட்பட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும்.
இவர்களது திறன்களை மதிப்பீடு செய்த பிறகு 15000 ரூபாய் மதிப்பிலான குறிப்பிட்ட அந்த தொழில் சம்பந்தப்பட்ட நவீன கருவிகளுக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும்... தகுதி பெறுவோருக்கு 5 முதல் 7 நாட்கள் அடிப்படை திறன் பயிற்சியும் வழங்கப்படுகிறது.. 15 நாட்கள் பயிற்சிக்கு பிறகு, ஒரு நாளைக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
அடிப்படை திறன் பயிற்சியை முடித்தவர்களுக்கு 18 மாதம் திருப்பி செலுத்த வேண்டிய கால அளவு கொண்ட அடைமானம் இல்லாத 1 லட்சம் ரூபாய் வரையிலான கடன் வழங்கப்படும். மேம்படுத்தப்பட்ட பயிற்சியை முடித்தவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலான கடன் கொடுக்கப்படும். ஆனால், முதலில் 1 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்திய பிறகே, இந்த 2 லட்சம் ரூபாய் கடனை பெற முடியும்.
பாரம்பரிய கைவினைக் கலைஞர்கள் தொழில்முனைவோர் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற உதவுவதே இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளதால், முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, மாதந்தோறும் ரூ. 500 நிதியுதவியும் வழங்கப்பட்டு வருவது, மிகுந்த நம்பிக்கையை தந்து வருகிறது.