சென்னையில் பெய்த மழைக்கு மத்திய அரசே காரணம்.. திமுக எம்பி தயாநிதி மாறன்..!

“சென்னையில் கடந்த வியாழக்கிழமை பெய்த பெருமழை காரணமாக குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த இன்னல்களுக்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம்” என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
இது குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கக் கோரி ஏற்கனவே 2 முறை பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தேன். இது குறித்து நாடாளுமன்றத்தில் பல முறை கேள்விகள் எழுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
சென்னையில் கடந்த வியாழக்கிழமை பெய்த பெருமழை காரணமாக குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த இன்னல்களுக்கு ஒன்றிய அரசின் தாமதமே காரணம்.
ரேடாரின் பழுதை சீரமைக்காததால், கனமழை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையத்தால் சரியாக வழங்க முடியவில்லை. எனவே, சென்னையில் பழுதடைந்துள்ள வானிலை ரேடார்களை உடனடியாக சீரமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.