மத்திய அரசு ஊழியர்கள் ஏ.ஐ., செயலிகள் மற்றும் கருவிகளை பயன்படுத்த தடை..!

நவீன தொழில்நுட்ப யுகத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ.,யின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இல்லாத துறையே இல்லை என்ற நிலை உருவாகி வருகிறது. ஏ.ஐ., பல்வேறு நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தினாலும், மோசடியாளர்கள் அதனை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சகத்தில் உள்ள அரசு சாதனங்களில் ஏ.ஐ., செயலிகள் மற்றும் கருவிகளை பயன்படுத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற செயலிகளினால், அரசு ஆவணங்கள் மற்றும் தகவல்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.