1. Home
  2. தமிழ்நாடு

கல்லறை திருநாள் விழா ரத்து! பிற நாட்களில் அஞ்சலி செலுத்தலாம்!

கல்லறை திருநாள் விழா ரத்து! பிற நாட்களில் அஞ்சலி செலுத்தலாம்!


கல்லறை திருநாள் அன்று பொதுமக்கள் யாரும் கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம் என்றும் நவம்பர் மாதத்தின் மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் என்றும் சென்னை கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னோர்களை நினைவுகூறும் வகையில், ஒவ்வொரு வருடமும் நவம்பர் 2-ம் தேதி கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்று கல்லறை தோட்டங்களில் இறந்து போனவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 2-ம் தேதி இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லறைகள் அமைப்பு அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கொரோனா பரவல் காரணமாகவும், கொரோனா பரவலை தடுக்கும் வகையிலும், சென்னை மயிலை கத்தோலிக்க பேராயம் மற்றும் தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் ஆலோசனைப்படி, இந்த வருடம் நவம்பர் 2-ம் தேதி கீழ்ப்பாக்கம், காசிமேடு ஆகிய கல்லறை தோட்டங்களை பூட்டிவைப்பது என்று அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. மத்திய, மாநில அரசின் அறிவுரைகளின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பொதுமக்கள் யாரும் அன்றைய தினம் கல்லறைத் தோட்டங்களுக்கு வரவேண்டாம். மற்ற நாட்களில் மக்கள் வந்து மறைந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like