பிரபல டிவி நடிகை அதிரது கைது! போதைப் பொருள் வழக்கில் சிக்கும் பிற நடிகைகள்!

பிரபல டிவி நடிகை ப்ரீத்திகா சவுகான் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிகர் சுஷாந்த்சிங் மரண வழக்கு விசாரணையில் பாலிவுட், டோலிவுட் என்று வழக்கு விசாரணையின் போது பூதாகரமாக போதைப் பொருட்களை சினிமா நட்சத்திரங்கள் பயன்படுத்தி வருவது அதிர வைத்துள்ளது. ட்சினிமா நட்சத்திரங்களுக்கும் போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கும் தொடர்புகள் இருப்பது தினம் தினம் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. பல நடிகர், நடிகைகளும் போதை கும்பல்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர்.
நடிகை ரேகா சக்ரோபர்த்தி தொடங்கி அடுத்தடுத்து நடிகைகளின் கைதுகள் தொடருகின்றன. இந்த வழக்கில் நடிகைகள் தீபிகா படுகோனே, சார அலிகான் உள்ளிட்டோர் ஏற்கனவே விசாரிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே போதைப் பொருள் வாங்க முயற்சித்ததாக டிவி நடிகை ப்ரீத்திகா சவுகானும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.