ஒன் பை ஒன் ஆக வெளியேறும் பிரபலங்கள்..! குக் வித் கோமாளி நிகழ்ச்சி நிறுத்தப்படுகிறதா ?
குக் வித் கோமாளி நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் 5-வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இதற்கிடையில் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்த செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் சமீபத்தில் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். தொடர்ந்து தயாரிப்பாளர் ரவூஃபாவும் விலகினார்.
இந்தநிலையில் இயக்குநர் பார்த்திபனும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சில குட்பை சொல்வது ரொம்பவே கடினம், ஆனால் அதே நேரத்தில் மகிழ்ச்சியான நினைவுகளுடன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுகிறேன். இது எங்களுக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல, நான்கு சீசன்களும் நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக பயணித்த நினைவுகள் எனது நெஞ்சில் எப்போதும் இருக்கும். உங்கள் அனைவரின் அன்பு, ஆசிர்வாதத்திற்கு மிகவும் நன்றி.என்றைக்கும் உங்கள் நன்றி உடையவனாக இருப்பேன். எங்களுக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று மிகவும் உருக்கத்துடன் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சி அவ்வளவு தானா? என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தற்போது, இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனமும் விலகியுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் இந்த நிகழ்ச்சி நிறுத்தப்படும் என கூறப்படுகிறது.