1. Home
  2. தமிழ்நாடு

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட திரைப்பிரபலங்கள்..!

1

  • ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க தென்னிந்திய நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, மோகன்லால், பிரபாஸ், அல்லு அர்ஜுன், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.
  • பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்சய் குமார், அஜய் தேவ்கன், கங்கனா ரணாவத், மாதுரி தீக்ஷித் மற்றும் அவரின் கணவர் ஸ்ரீராம் நேநே, பாஜக எம்.பி. ஹேமமாலினி, சன்னி டியோல் போன்றோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • பிரபல இயக்குனர்கள் அனுபம் கேர், மதுர் பண்டார்கர் மற்றும் சஞ்சய் லீலா பன்சாலிக்கும், பின்ணணி பாடகர்கள் ஸ்ரேயா கோஷல், கைலாஷ் கெர், சங்கர் மகாதேவன், அனுப் ஜலோட்டா, சோனு நிகம் மற்றும் அனுராதா பௌட்வால் உள்ளிட்டோருக்கும் இந்த பிரமாண்ட நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
  • மேலும் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1980-களில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர், சீதை வேடங்களில் நடித்த அருண் கோவில், தீபிகா சிக்லியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
  • இயக்குனர் சந்திரபிரகாஷ் திவேதி, பாடகி மாலினி அவஸ்தி, சரோத் மாஸ்ட்ரோ அம்ஜத் அலி, இசைஞானி இளையராஜா மற்றும் மறைந்த பாடகி லதா மங்கேஷ்கரின் குடும்ப உறுப்பினர்கள், ஜானு பருவா, கௌஷிகி சக்ரவர்த்தி, மஞ்சு போரா மற்றும் மல்சா கோஸ்வாமி, கவிஞர் மனோஜ் முன்டாஷிர் மற்றும் அவரது மனைவி, பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் பிரசூன் ஜோஷி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் நடிகர் ரஜினிகாந்த். கிளம்புவதற்கு முன் போயஸ் தோட்டத்தில் பேட்டியளித்த அவர், "ராம ஜென்ம பூமிக்கு" செல்வதில் மகிழ்ச்சி என்று கூறினார். ஆன்மீகத்தில் அதிக ஆர்வம் கொண்ட ரஜினிகாந்த், மத்திய அரசு & பாஜகவுடனும் இணக்கமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இருந்து முதல் VIPயாக ரஜினி அயோத்தி சென்றிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like