1. Home
  2. தமிழ்நாடு

வெளியான சிசிடிவி காட்சிகள்..! சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் படுகாயம்!

1

 பூவிருந்தவல்லி அடுத்த சக்தி நகர் பகுதியில் குமார் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வட மாநில தொழிலாளர்கள் வாடகைக்கு தங்கி இருந்துள்ளனர். அவர்கள் இன்று மதியம் உணவு தயாரிப்பதற்காக எரிவாயுவை ஆன் செய்த போது அதிலிருந்து கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதனை அடுத்து வீட்டிலிருந்த வடமாநில தொழிலாளர்கள் அங்கிருந்து அவசரமாக வெளியேறிய நிலையில் எதிர் வீட்டில் வசிக்கக்கூடிய பிரஜன், குமார், சரஸ்வதி ஆகியோர் என்னவென்று பார்த்து கொண்டிருந்த போது திடீரென சிலிண்டர் வெடித்தது.

இதில் அவர்களுக்கு தீ பரவிய நிலையில் அவர்களுக்கு தீ காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் தீக்காயமடைந்த சிறுவர் உட்பட 7 பேரை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். தகவலறிந்து வந்த பூவிருந்தவல்லி தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதி போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் உள்ள காலி சிலிண்டர்களை வாங்கி வைத்து கொண்டு பெட்ரோல் பங்க்குகளில் ஆட்டோ மற்றும் வாகனங்களுக்கு நிரப்பி கூடிய கேஸை நிரப்பி வீட்டில் உபயோகபடுத்தி வந்துள்ளனர்.

மேலும் அந்த சிலிண்டர்களில் ஏற்கனவே கசிவு ஏற்பட்ட நிலையில் அதனை கவனிக்காமல் இருந்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like