பதற வைக்கும் கல்குவாரி வெடி விபத்தின் சிசிடிவி காட்சிகள்..!
விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் பாறைகளை உடைக்க வெடி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெடியால் ஏற்பட்ட விபத்தால் 4 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த குவாரியில் இன்று காலை 20-க்கும் மேற்ப்பட்ட தொழிளார்கள் பணியில் இருந்துள்ளனர். எனவே இந்த விபத்தில் பலர் சிக்கிருக்கலாம் என்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்ககூடும் என சொல்லப்படுகிறது.
மேலும் இந்த விபத்தால் கல்குவாரி அருகேயுள்ள T. கடமங்குளம் கிராமத்தில் உள்ள 20-க்கும் மேற்ப்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளது என பொதுமக்கள் குற்றம் சாடியுள்ளனர். இந்த கல்குவாரியை மூட கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். தொழிளார் தினத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#WATCH | விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது.. இவ்விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்!#SunNews | #Virudhunagar pic.twitter.com/MjGoFYXMMi
— Sun News (@sunnewstamil) May 1, 2024