4 வயது சிறுமியை 5 நாய்கள் கடித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

4 வயது சிறுமியை 5 நாய்கள் கடித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!

4 வயது சிறுமியை 5 நாய்கள் கடித்த பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
X

மத்தியப் பிரதேச மாநிலத்தில் 4 வயது சிறுமியை 5 நாய்கள் துரத்திச் சென்று, தரையில் இழுத்து, கடித்துக் குதறும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் உள்ள அஞ்சலி விகார் காலனியில் வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தெரு நாய்கள் தாக்கி உள்ளன.

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு அருகில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் வந்து நாய்களை துரத்தி சிறுமியை மீட்டுள்ளார். சிறுமிக்கு தலை, காது, கை என உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, கோஹெபிசா பகுதியில், 7 வயது சிறுமி தனது தாய் முன்னிலையில் தெருநாய்களால் தாக்கப்பட்டார். மேலும் 2019-ம் ஆண்டில், 6 வயது சிறுவன் ஒருவன் அவனது தாய்க்கு முன்னால் அரை டஜன் தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்டான். சிறுவனைக் காப்பாற்ற முயன்ற சிறுவனின் தாய் பலத்த காயங்களுக்கு உள்ளானார் என்பது குறிப்பிடதக்கது.

போபாலில் தெரு நாய்கள் பயங்கரமாக மாறியுள்ளன. அங்கு ஏறக்குறைய 1 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.


Next Story
Share it