சிபிஎஸ்இ 12ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!

இந்தியாவில் மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இடைநிலை கல்வி வாரியம் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு (CBSE) 2022 -2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடத்தியது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை அளிக்கும் நோக்கில் துணைத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிறகு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஜூலை மாதம் 17ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு நடத்தப்பட்டது. தற்போது இந்த CBSE 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவெண்ணை உள்ளீட்டு தேர்வின் முடிவுகளை அறியலாம்.
http://cbseresults.nic.in, http://cbse.gov.in, http://results.nic.in, ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் முடிவுகளை அறியலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதிய 1,20,742 மாணவர்களில் 57,331 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி விகிதம் 47% என அறிவிக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தல் தேர்வில் 59% மாணவர்களின் தரம் மேம்பட்டுள்ளதாகவும், 35% மாணவர்கள் தரம் குறைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.