சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு தேர்வு; எந்த தளத்தில் முடிவுகளை பார்க்கலாம்?

CBSE தேர்வு முடிவுகளை மே 10 முதல் 15 ஆம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம். அதிகாரப்பூர்வ தேதித் தகவல் விரைவில் CBSE இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.gov.in இல் வெளியிடப்படும்.
இந்த ஆண்டு சிபிஎஸ்இ தேர்வுகளை 42 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வில், 24.12 லட்சம் மாணவர்கள் 10 ஆம் வகுப்புத் தேர்வையும், 17.88 லட்சம் மாணவர்கள் இடைநிலைத் தேர்வையும் எழுதியிருந்தனர். 10 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 முதல் மார்ச் 18 வரை CBSE ஆல் நடத்தப்பட்டன, அதேபோல் 12 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 4, 2025 வரை நடத்தப்பட்டது. வாரிய அதிகாரிகளின் கூற்றுப்படி, மொத்தம் 24.12 லட்சம் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 84 பாடங்களில் தேர்வு எழுதியுள்ளனர், அதே நேரத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கு 120 பாடங்களுக்கு 17.88 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
தேர்வு முடிவுகள் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ளன நிலையில் தேர்வு முடிவுகளை CBSE இணையதளமான cbse.gov.in, DigiLocker portal results.digilocker.gov.in இல் ஆன்லைனில் சரிப்பார்க்கலாம். இதனுடன், மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் உமாங் செயலி அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளைப் பார்க்க முடியும்.
CBSE தேர்வு முடிவுகளை 2025 சரிபார்க்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள்:
cbseresults.nic.in
cbse.gov.in
cbse.nic.in
results.cbse.nic.in
CBSE தேர்வு 2025 முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?
சிபிஎஸ்இ cbseresults.nic.in இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்
CBSE Board Result 2025 இணைப்பைக் கிளிக் செய்யவும்
உங்கள் ரோல் எண் அல்லது பதிவு எண்ணுடன் உள்நுழையவும்
உங்கள் முடிவுகளைப் பார்க்க விவரங்களைச் சமர்ப்பிக்கவும்
கடைசியாக முடிவின் நகலை டவுண்லோட் செய்துக் கொள்ளவும்.