சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை வெளியீடு..!
சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டப்படி பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்குகிறது. அதிகாரப்பூர்வ பொதுத் தேர்வு அட்டவணை https://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை :
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கி மார்ச் 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தேதி | பாடம் |
15.02.2025 | ஆங்கிலம் |
20.02.2025 | அறிவியல் |
22.02.2025 | பிரெஞ்சு மற்றும் சமஸ்கிருதம் |
25.02.2025 | சமூக அறிவியல் |
27.02.2025 | தமிழ் |
28.02.2025 | இந்தி |
10.03.2025 | கணிதம் |
13.03.2025 | வீட்டு அறிவியல் |
18.03.2025 | கணினி பயன்பாடு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொடர்பியல் |
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை :
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தேதி | பாடம் |
15.02.2025 | தொழில்முனைவு |
17.02.2025 | உடற்கல்வி |
20.02.2025 | கணினி பயன்பாடு |
21.02.2025 | இயற்பியல் |
22.02.2025 | தொழில் படிப்பு மற்றும் வணிக நிர்வாகம் |
24.02.2025 | புவியியல் |
25.02.2025 | பிரெஞ்சு |
27.02.2025 | வேதியியல் |
04.03.2025 | வங்கியியல் |
05.03.2025 | விவசாயம் |
08.03.2025 | கணிதம் |
11.03.2025 | ஆங்கிலம் |
15.03.2025 | இந்தி |
19.03.2025 | பொருளாதாரம் |
22.03.2025 | அரசியல் அறிவியல் |
25.03.2025 | உயிரியல் |
26.03.2025 | கணக்கியல் |
29.03.2025 | கணினி அறிவியல் |
01.04.2025 | வரலாறு |
02.04.2025 | தமிழ் |
03.04.2025 | வீட்டு அறிவியல் |
04.04.2025 | உளவியல் |
சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.30 மணிக்கு முடிவடையும். முழுமையான அட்டவணையை மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.