1. Home
  2. தமிழ்நாடு

CBSE பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு..!முதலிடம் பிடித்த மாநிலம் எது.?

Q

சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. 10-ம் வகுப்பிற்கு மார்ச் 18-ம் தேதியுடன் தேர்வு முடிவடைந்தது. 12-ம் வகுப்பிற்கு ஏப்ரல் 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. இத்தேர்வை சுமார் 42 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்நிலையில், தேர்வு முடிவுகளை https://www.cbse.gov.in/, https://results.cbse.nic.in/, https://cbseresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக அறிந்துகொள்ளலாம்.

மாணவர்கள் https://www.cbse.gov.in/, https://results.cbse.nic.in/, https://cbseresults.nic.in/ மற்றும் https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதளங்களின் வழியாக முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 88.39% தேர்ச்சி விகிதம். விஜயவாடா மண்டலம் முதலிடத்திலும், திருவனந்தபுரம் மண்டலம் இரண்டாம் இடத்திலும் உள்ளன. 

SMS மூலம் தேர்வு முடிவுகளை எவ்வாறு சரிபார்ப்பது?

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை SMS மூலம் சரிபார்க்கலாம், இதற்கு மாணவர்கள் "CBSE 12 (ரோல் எண்) (DDMMYYYY - பிறந்த தேதி) (பள்ளி எண்) (மைய எண்)" என்று டைப் செய்து 7738299899 க்கு அனுப்ப வேண்டும். எஸ்எம்எஸ் அனுப்பிய சிறிது நேரத்திலேயே, மாணவர்கள் தங்கள் முடிவு தொடர்பான தேவையான அனைத்து தகவல்களையும் பெறுவார்கள்.

Trending News

Latest News

You May Like