1. Home
  2. தமிழ்நாடு

பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் - சிபிஎஸ்இ அறிவிப்பு..!

1

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் (CBSE) பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு 2023-24 ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி 10ம் வகுப்புக்கு மார்ச் 13ஆம் தேதி வரையிலும், 12ஆம் வகுப்பிற்கு ஏப்ரல் 2ஆம் தேதி வரையிலும் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் பொதுத்ததேர்வுக்கான அனுமதிச் சீட்டு http://www.cbse.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். எனவே மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர்.

தேர்வறைக்கு வருகை தரும் நேரம் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.10 மற்றும்  12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 13ஆம் தேதியும் 12ஆம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதியும் நிறைவுபெறுகிறது. 

Trending News

Latest News

You May Like