1. Home
  2. தமிழ்நாடு

துணை முதலமைச்சர் வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!!

துணை முதலமைச்சர் வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!!


மதுபான உரிம முறைகேடு தொடர்பான வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் வங்கி லாக்கரை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், மணீஷ் சிசோடியா கணக்கு வைத்திருக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, சிபிஐ அதிகாரிகள் 5 பேர் சென்றனர். அவர்களுடன் சிசோடியாவும், அவரது மனைவியும் சென்றனர். இதையடுத்து சிசோடியாவின் வங்கி லாக்கரை திறந்து சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மணீஷ் சிசோடியா, தமது லாக்கரில் கணக்கில் வராத எந்த பொருட்களும் சிக்கவில்லை என்றும், 80,000 ரூபாய் மதிப்புள்ள தமது மனைவியின் நகைகள் மட்டுமே இருந்தது எனவும் கூறினார்.

துணை முதலமைச்சர் வங்கி லாக்கரில் சிபிஐ ரெய்டு!!

பிரதமர் மோடி சிபிஐ அதிகாரிகளை தமது வீட்டுக்கு அனுப்பியதாகவும், 3 மாதங்களுக்குள் தம்மை சிறைக்கு அனுப்ப அவர் சிபிஐக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் உரையாற்றிய சிசோடியா, மாநில அரசுகளை வெளியேற்றும் வகையில், பாஜக தலைமையிலான மத்திய அரசு கொலைகாரர்கள் போல் செயல்படுவதாக விமர்சித்தார்.

டெல்லியின் துணை நிலை ஆளுநரான வி.கே.சக்சேனா, காதி ஆணையத்தின் தலைவராக இருந்த போது 1,400 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அவரிடம் சிபிஐ விசாரணை நடத்துவது எப்போது என்றும் கேள்வி எழுப்பினார்.

newstm.in

Trending News

Latest News

You May Like