1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் 3 இடங்களில் சிபிஐ ரெய்டு.. பிரபல ஆடிட்டர் வீட்டிலும் சோதனை!

Q

சென்னையில் உள்ள 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தாது மணல் முறைகேடாக எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அடிப்படையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் அலுவலகம், அந்த நிறுவனத்தின் ஆடிட்டர் ஹரி என்பவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதேபோல் ஆல்பர்ட் தியேட்டர் அருகே ஜெகதீசன் என்பவரின் அலுவலகம் மற்றும் சுகுமார் என்பவரின் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் 5க்கும் அதிகமான இடங்களில் தாது மணல் முறைகேடு தொடர்பாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை 2 மணி நேரத்திற்கும் அதிகமாக நடந்து வருகிறது.

Trending News

Latest News

You May Like