ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., சம்மன்..!

கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இங்கு கடந்த, 2017ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட, 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
Also Read - மும்பை அணி வெற்றிக்கு 197 இலக்கு..!
போதுமான ஆதாரங்கள் கிடைக்காததால் சி.பி.சி.ஐ.டி., போலீசார், 200க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், கூடுதல் தகவல்களை பெறும் வகையில் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியாக இருந்த வீர பெருமாள், பெருமாள் சாமி ஆகியோரை விசாரித்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். மார்ச் 27ம் தேதி கோவை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் பங்குதாரராக இருந்ததன் அடிப்படையில் சுதாகரனுக்கு சம்மன் அனுப்பியதாக சி.பி.சி.ஐ.டி., தரப்பு விளக்கம் அளித்துள்ளது.