1. Home
  2. தமிழ்நாடு

காவிரி நீர் விவகாரம் : தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்..!

1

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.  காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் தனி தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.  காவிரி நீர் உரிமையை காப்பதில் திமுக அரசு எப்போது உறுதியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தண்ணீர் திறந்து விட கர்நாடகா அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற தனி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார்.

உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக முறையாக மேட்டூர் அணையை கடந்த ஜூன் 12ஆம் தேதி திறந்து வைத்தோம்.  காவிரி விவகாரத்தில் செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கியுள்ளது. நீதிமன்ற உத்தரவையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை.  கர்நாடகாவில் உள்ள நான்கு அணைகளிலும் நீர் வரத்து போதுமானதாக இருந்த போதிலும் நீர் திறக்கவில்லை. 9.19 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டிய நிலையில் 2.28 டிஎம்சி மட்டுமே கிடைத்துள்ளது.  தமிழ்நாடு அரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளை எடுத்து ஜூலை 21ஆம் தேதி கபினி அணைகளில் இருந்து அடுத்த ஆறு நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டது. சட்ட வல்லுநர்களுக்கு ஆலோசித்து நீரை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கை தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்றார்.

Trending News

Latest News

You May Like