மீண்டும் கூடுகிறது காவிரி ஒழுங்காற்றுக் குழு..!
வரும் அக்டோபர் 30- ஆம் தேதி அன்று 89வது காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கூடுகிறது. காணொளி காட்சி வாயிலாக நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு குழுவின் தலைவர் வினித் குப்தா அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த அக்டோபர் 13- ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வீதம் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் கூடுகிறது.