1. Home
  2. தமிழ்நாடு

கேத்தரின் தெரசா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் "பனி" மே மாதம் வெளியாகிறது..!

Q

OMG புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் மீனாட்சி அனிபிண்டி தயாரிக்கும் இந்த படத்தை வி என் ஆதித்யா இயக்குகிறார்.
கேத்தரின் தெரசா படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் , இவரோடு
மகேஷ் ஸ்ரீராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இந்தப்படத்தில் பாம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரமாக வருகிறது.
உயர்தர அனிமேஷன் காட்சிகள் இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்கள்
இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது , ஆனால் மனிதன் தனக்குமட்டுமே இந்த உலகம் என்கிற எண்ணத்தில் மற்ற உயிரினங்களை பன்னெடுங்காலமாக மெல்ல மெல்ல அழித்து மனித உயிர்களே இன்று உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கிறது.
இந்தப்படம் மனித உயிர் எவ்வளவு முக்கியமோ அதைப்போலவே மற்ற உயிரினங்களின் உயிரும் முக்கியம் என்பதை வலியுறுத்தும் படமாகவும் இருக்கும்.
இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாகவும் இருக்கும்.
இந்தப்படத்திற்கு மிகப்பொருத்தமான கதாநாயகி கேத்தரின் தெரசா என்பது படம் பார்க்கும்பொழுது எல்லோரும் உணருவார்கள் அந்த அளவுக்கு அவரின் நடிப்பு இந்தப்படத்திற்கு பெரும் பலமாக இருக்கிறது 
இந்தி தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் பல மொழிகளில் வெளியாகிறது என்றார் படத்தின் இயக்குனர் வி என் ஆதித்யா.
புகழ்பெற்ற இயக்குனர் கே. ராகவேந்திரராவ் ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில்
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு
 'பனி' படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டார்.
மே மாதம் உலகெங்கும் வெளியாகவிருக்கிறது "பனி " திரைப்படம்.

Trending News

Latest News

You May Like