1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக் கூடாது : சென்னை ஐகோர்ட்..!

1

கல்வராயன் மலை பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும் சென்னை ஐகோர்ட்,  தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் கோர்ட்டில்  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலையில் 150 பள்ளிகள் இருப்பதாகவும், பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

அந்த அறிக்கையை பார்த்த நீதிபதி பாலசுப்ரமணியம், கல்வராயன் மலைப் பகுதியில் அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும், மக்கள் வரிப்பணத்தில் நடத்தப்படும் அரசு பள்ளிகளில் சாதி பெயர் இருக்கலாமா எனவும் அரசிடம் கேள்வியெழுப்பினார். 

தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் சாதி பெயர் பயன்படுத்தக் கூடாது எனவும் தெருக்களில் உள்ள சாதி பெயரை நீக்கியது போல அரசு பள்ளிகளிலும் சாதி பெயரை நீக்கி விடுங்கள் எனவும் நீதிபதி கூறினார். 

கல்வராயன் மலை பகுதிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும், அரசு குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணியும் உடன் செல்ல வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை வருகிற 9-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.   

Trending News

Latest News

You May Like