1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகா மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம்..!

1

கர்நாடகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2010-ம் ஆண்டு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நடத்தப்படவில்லை என்று கூறி பெரும்பான்மை சமூகங்களான லிங்காயத், ஒக்கலிக சமூகங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இதையடுத்து அந்த கணக்கெடுப்பு அறிக்கையை கைவிடுவதாக முதல்வர் சித்தராமையா அறிவித்தார். அதைத்தொடர்ந்து புதிதாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அது செப்டம்பர் 22-ந் தேதி தொடங்கும் என்றும் சித்தராமையா அறிவித்தார்.

இந்த முறை புதிதாக 336 சாதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன. இதில் குறிப்பாக சுமார் 47 கிறிஸ்தவ துணை சாதிகள் சேர்க்கப்பட்டன. இதற்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.இந்த புதிய சாதிகளால் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மந்திரிசபை கூட்டத்தில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உள்பட சில மந்திரிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த கணக்கெடுப்பு நடைபெறுமா என்ற கேள்விக்குறி எழுந்தது.

இதற்கு விளக்கம் அளித்த முதல்வர் சித்தராமையா, குழப்பங்கள் தீர்க்கப்பட்டு திட்டமிட்டப்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு 22-ந் தேதி தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி கர்நாடகத்தில் நேற்று (திங்கட்கிழமை) சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கியது. இந்த பணியில் 1.75 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இந்த கணக்கெடுப்பு பணி 17 நாட்கள் அதாவது வருகிற அக்டோபர் 7-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் சுமார் 7 கோடி பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன. கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாக சென்று தகவல்களை சேகரிப்பார்கள். மக்கள் தங்களிடம் உள்ள ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு மற்றும் பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கணக்கெடுப்பாளர்கள் 60 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க உள்ளனர். 

Trending News

Latest News

You May Like