1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் ‘கேஷ்லெஸ்’ பஸ்... இனி பர்ஸில் காசு இன்றியே தமிழக பேருந்துகளில் பயணிக்கலாம்..!

1

நாடு முழுக்க பல சேவைகள் தற்போது கேஷ் லெஸ் சேவைகளாக மாறியுள்ளன. அதாவது நேரடியாக பணத்தை கொடுக்காமல் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதியாகும். தமிழ்நாட்டிலும் பல்வேறு சேவைகளுக்கு யுபிஐ சேவை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் ஏடிஎம் செல்லாமலே எளிதாக யுபிஐ மூலம் பணம் செலுத்த முடிகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் கேஷ் லெஸ் முறை கொண்டு வரப்பட உள்ளது. ஆனால் இது யுபிஐ போன்றது கிடையாது. கொஞ்சம் வித்தியாசமான முறையாகும்.

மத்திய அரசின் National Common Mobility Card (NCMC) என்ற திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைந்து உள்ளது. இதன் மூலம் அரசு பேருந்துகளில் கார்டுகளை வைத்து பயணிக்க முடியும். இது மெட்ரோ பாஸ் போல செயல்பட கூடியது ஆகும். மெட்ரோவில் நாம் மாதம் தொகை செலுத்தி பாஸ் பயன்படுத்துவோமே அதேபோல்தான் இதுவும் செயல்படும். பேருந்து டிப்போக்களில் இந்த கார்டுகளை நாம் வாங்கிக்கொள்ள முடியும்.

அதில் இருக்கும் எண்ணுக்கு நாம் ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். பின்னர் அந்த கார்டை வைத்துக்கொண்டு அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் போது நடத்துனர் வைத்து இருக்கும் மெசினில் காட்டினால் போதும். அவரிடம் என்ன இடம் என்று சொன்னால் அவர் நம்முடைய கார்டை ஸ்கேன் செய்துவிட்டு டிக்கெட்டை கொடுப்பார். இதன் மூலம் எளிதாக பணம் இன்றி நாம் பயணம் செய்ய முடியும்.
 

Trending News

Latest News

You May Like