1. Home
  2. தமிழ்நாடு

முந்திரி லாரி கடத்தல்.. முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டாஸ்..!

முந்திரி லாரி கடத்தல்.. முன்னாள் அமைச்சர் மகன் மீது குண்டாஸ்..!


அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேர், கடந்த 26-ம் தேதி 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான 16 டன் முந்திரி பருப்பை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி துறைமுகத்திற்கு சென்ற லாரியை பொட்டலூரணி அருகே வந்தபோது, காரால் வழிமறித்து லாரி ஓட்டுநர் ஹரியை தாக்கிவிட்டு, அவரையும் லாரியையும் கடத்திச் சென்றனர்.

சரியான நேரத்தில் லாரி வந்து சேரவில்லை என்பதால் இதுபற்றி தூத்துக்குடியில் உள்ள லாரி புக்கிங் அலுவலக கணக்கரான முத்துக்குமார், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின் காவல் உதவி கண்காணிப்பாளர் சந்தீஸ் மற்றும் புதுக்கோட்டை ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை காவல்துறையினர் சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் காக்கநேரி என்ற இடத்தில் வைத்து கன்டெய்னர் லாரி மற்றும் காரை மடக்கிப் பிடித்து, ஞானராஜ் ஜெபசிங் உட்பட 7 பேரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்நிலையில், லாரியுடன் ஒரு கோடி மதிப்பிலான முந்திரியை கடத்திய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் மகன் ஞானராஜ் ஜெபசிங் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Trending News

Latest News

You May Like