1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் அமல் : ரூ.1000 மேல் பணம் அனுப்பினால் கட்டணம்..!

1

யெஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் பராமரிப்பில் மே 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, யெஸ் ப்ரோ மேக்ஸ் சேமிப்பு கணக்கில் ரூ.50000 மினிமம் பேலன்ஸ் தொகை இருக்க வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சமாக ரூ.1000 கட்டணம் செலுத்தவேண்டும். அதேபோல யெஸ் ப்ரோ பிளஸ், யெஸ் எசென்ஸ் மற்றும் யெஸ் ரெஸ்பெக்ட் சேமிப்பு கணக்குகளில் ரூ.25000 மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டும். இல்லையென்றால், அதிகபட்சமாக ரூ.750 கட்டணம் இருக்கும். யெல் வேல்யூ மற்றும் கிஷான் கணக்குக்கு மினிமம் பேலன்ஸ் ரூ.5000 இருக்கிறது.

இல்லையென்றால், ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல யெஸ் மை ஃபர்ஸ்ட் கணக்குக்கு ரூ.2500 மினிமம் பேலன்ஸ் பராமரிப்பு இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் ரூ.250 கட்டணம் செலுத்த வேண்டும். மேலும், யெஸ் வங்கியின் கிரெடிட் கார்டில் ஸ்டேட்மெண்ட் சுழற்சிக்கு 1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும்.

மே 1ஆம் தேதி முதல் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் டெபிட் கார்டு ஆகியவற்றில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆகவே, மே 1ஆம் தேதிக்கு பிறகு ஐஎம்பிஎஸ் மூலம் ரூ.1000-க்கும் கீழ் பணம் அனுப்பினால் ரூ.2.5 கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல ரூ.1000 முதல் ரூ.25000 வரையில் அனுப்பினால் ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும், ரூ.25000 முதல் ரூ.5 லட்சம் வரையில் பணம் அனுப்பினால், ரூ.15 கட்டணமாக வசூலிக்கப்படும். டெபிட் கார்டு வருடாந்திர கட்டணமாக ரூ.200 வசூலிக்கப்படும் அதுவே கிராமப்புறங்களில் ரூ.90ஆக எடுத்து கொள்ளப்படும். இந்த விதிகள் ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும்.



 

Trending News

Latest News

You May Like