1. Home
  2. தமிழ்நாடு

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட 107 பேர் மீது வழக்கு பதிவு..!

1

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இதற்காக போலீசிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார்.

மேலும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரும் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர். பெண்கள் உள்பட பலரும் கைது செய்யபட்டு அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாலை 6 மணி ஆகியும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதனால் போலீசாரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பி அண்ணாமலை வாக்குவாதம் செய்தார். 5.30 மணிக்கு டாஸ்மாக் அலுவலகம் மூடப்பட்டு விட்டது, அதன்பிறகும் எங்களை ஏன் விடுவிக்கவில்லை என்றும், டாஸ்மாக் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினால் பிரச்சினை ஏற்படும் என்று கூறி தானே கைது செய்தீர்கள்.. இப்போது டாஸ்மாக் அலுவலகமே மூடப்பட்ட பின்னரும் எங்களை ஏன் விடுவிக்க மறுக்கிறீர்கள் என்றும், இங்கு ஏராளமான பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை 6 மணி அடைத்து வைக்க முடியாது என்பது சட்டம் இதை அறிந்து ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார்.

இதனை தொடர்ந்து மாலை 7 மணியளவில் அண்ணாமலை மற்றும் அவருடன் இருந்த பாஜக தொண்டர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தான் அண்ணாமலை உள்ளிட்ட 107 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக பேசிய அண்ணாமலை, "காவல்துறை மீது நம்பிக்கை இழந்துவிட்டோம். இனி எந்த ஆர்ப்பாட்டத்திற்கும் அனுமதி கேட்டு காவல்துறையிடம் கடிதம் கொடுக்க மாட்டோம்.

காவல்துறை ஏவல் துறையாக மாறியுள்ளதால், அடுத்த ஒரு வாரத்திற்குள் 2 போராட்டம் நடத்தப்படும். ஒன்று, டாஸ்மாக்கில் உள்ள எல்லா கடைகளிலும் பாஜக பெண் தொண்டர்கள் முதல்வரின் பிரேம் போட்ட புகைப்படத்தை ஆணி அடித்து ஒட்ட போகிறோம். இன்னொரு போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள எல்லா டாஸ்மாக்குகளுக்கும் பூட்டு போட்டு போராடுவோம். காவல்துறை முடிந்தால் எங்களை தடுத்து பார்க்கட்டும். இன்று இரவில் இருந்து காவல் துறையினருக்கு தூக்கம் இருக்காது" என்று கூறினார்.

Trending News

Latest News

You May Like