லப்பர் பந்து நடிகை மீது வழக்குப்பதிவு..!
அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண் உள்ளிட்டோர் நடித்து வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வரும் திரைப்படம் 'லப்பர் பந்து'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.இப்படத்தில் நடித்த ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் என அனைவரது நடிப்பும் பேசப்பட்டு வரும் நிலையில், யசோதாவாக நடித்த சுவாசிகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. டிவி தொகுப்பாளருமான சுவாசிகா, தமிழ், மலையாள படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், 'லப்பர் பந்து' பட நடிகை நடிகை ஸ்வாசிகா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூப் சேனல் மூலம் பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைத்ததாக கேரளாவின் ஆலுவாவைச் சேர்ந்த நடிகை புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் நடிகைகள் ஸ்வாசிகா, பீனா ஆண்டனி, அவரது கணவரும் நடிகருமான மனோஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முதல் குற்றவாளியாக பீனா ஆண்டனியும், இரண்டாவது குற்றவாளியாக அவரது கணவர் மனோஜும், மூன்றாவது குற்றவாளியாக ஸ்வாசிகாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகின் எடவேல பாபு, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு, ஜெயசூர்யா, ஜாஃபர் இடுக்கி மற்றும் நடிகரும் இயக்குனருமான பாலச்சந்திர மேனன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் மீது புகார் அளித்த நடிகை சமீபத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனையடுத்து, அவரது புகாரின் பேரில் போலீசார் இந்த நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.