1. Home
  2. தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகன் மீது வழக்கு பதிவு..!

1

சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் சித்ரா என்பவர் மூலம் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்த செல்வியின் மகள் ரேக்கா (18) என்பவர் திருவான்மியூரில் உள்ள பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. இ.கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் என்பவர் வீட்டில் வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

மேலும் ரேக்கா 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதால் அவரை ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மார்லினா ஆகியோர் கல்லூரியில் படிக்க வைப்பதாக கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்ட பணிப்பெண் ரேக்கா, எம்.எல்.ஏ-வின் பேரக்குழந்தை அழும்போதெல்லாம் ரேக்காவை அவரது மகன் மற்றும் மருமகள் அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், உடலின் பல இடங்களில் சிகரெட்டால் எம்.எல்.ஏ. மகன் ஆண்டோ சூடு வைத்ததாகவும், அவரது மருமகள் தலை முடியை வெட்டி அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஏழு மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்தரவதை செய்யப்பட்ட நிலையில், ரேக்கா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடித்தாலும் தனது அம்மாவிடம் போன் மூலம் பேசினாலும், நாங்கள் பெங்களூரில் இருப்பதாக கூறவேண்டும் என மிரட்டியதாகவும், பொங்கல் பண்டிகைக்காக வீட்டிற்கு வரவேண்டும் என ரேக்காவின் தாய் செல்வி அழைத்தாலும், சென்னையில் ரேக்கா துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், மீறி கூறினால் ”நாங்கள் ஆளுங்கட்சிக்காரங்க நாங்க சொன்னா எல்லாமே வாய மூடிட்டு போவாங்க, உங்க குடும்பத்தையே கொளுத்தி விடுவோம், உன் குடும்பத்தில் உங்க அம்மா உன் தம்பி அனைவரையும் கொலை செய்து விடுவோம்”, என மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு எம்.எல்.ஏ.வின் மகன் மற்றும் அவரது மாமனார், மாமியார் ஆகியோர் ரேக்காவை காரில் அழைத்து வந்து திருநறுங்குன்றம் கிராமத்தில் இறக்கி விட்டு சென்றதாகவும், ரேக்கா உடலில் பல இடங்களில் காயம் இருப்பதால் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து சென்னை திருவான்மியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் பாதிக்கப்பட்ட பணிப்பெண் ரேக்கா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ரேக்காவுக்கு நேர்ந்த கொடுமையை மறைத்து, இத்தனை நாட்களாக மிரட்டி, இந்த விவகாரம் வெளியே வரவிடாமல் செய்த எம்.எல்.ஏ-வின் மகன் ஆண்டோ மதிவாணன் மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும் என புகார்கள் எழுந்தது. 

இந்நிலையில் வீட்டில் வேலை செய்த பெண்ணை துன்புறுத்தியதாக எழுந்த புகாரில் ஆண்டோ மதிவாணன் மீது இன்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வளவு தாமதமாக நடவடிக்கை எடுத்துள்ளதால் ஆளுங்கட்சிக் காரர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதியா என சமூக வலைதளங்களில் போலீசார் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது.

Trending News

Latest News

You May Like