பிரபல நடன இயக்குநர் ஜானி மீது வழக்குப்பதிவு..!
தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற ‘மேகம் கருக்காதா பெண்ணே’ பாடலுக்குத் தேசிய விருதுப் பெற்றவர் நடன இயக்குநர் ஜானி. விஜயின் வாரிசு படத்தில் இடம்பெற்ற ‘ரஞ்சிதமே’, ரஜினியின் காவாலா போன்ற ஹிட் பாடல்களுக்கு நடனம் அமைத்துக் கொடுத்தவர்.
இந்நிலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் நடன இயக்குநர் ஜானி மீது ஆந்திர மாநிலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத், சென்னை, மும்பையென ஷூட்டிங் சென்ற இடங்களில் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஆந்திர மாநிலத்தில் பெண் திரைப்பட கலைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.