தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு..!
தமிழக வெற்றிக் கழகம் புஸ்ஸி ஆனந்தின் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் இவருக்கு வாழ்த்துக் கூறி தமிழகம் முழுவதும் உள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பேனர்கள் வைத்தனர்.
இதேபோல புதுச்சேரியில் புஸ்ஸி ஆனந்த் வீட்டின் அருகாமையில் உள்ள காந்தி வீதி மற்றும் புஸ்ஸி வீதி உட்பட நகரின் முக்கிய பகுதிகள் முழுவதிலும் தவெகவினர் பேனர் மற்றும் கட் அவுட் வைத்திருந்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் பேனர் கட்டவுட் வைப்பதற்கு தடை சட்டம் அமலில் உள்ளது.
அதனை அரசு தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தி வரும் சூழலில், நேற்றைய தினம் புஸ்ஸி பகுதியில் பேனர்கள் மற்றும் கட்டவுட் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி துணை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தார். இதன் பேரில் ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் தற்போது பேனர் வைத்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது