1. Home
  2. தமிழ்நாடு

'ஆன்லைன்' சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி 'ரீல்ஸ்' வெளியிட்ட ஆறு பேர் மீது, வழக்குப்பதிவு..!

Q

தமிழகத்தில், 'ஆன்லைன்' விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தவும், சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதனை ஊக்கப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கவும், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி நசிமுதீன் தலைமையில், தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சென்னையில் செயல்படுகிறது. சமீபத்தில், இவ்வாணையம், 18 வயதுக்கு உட்பட்டோர் பணம் கட்டி, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட தடை விதித்தது.
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள், நள்ளிரவு, 12:00 மணியில் இருந்து அதிகாலை, 5:00 மணி வரை, எந்த நபரும் பணம் கட்டி விளையாட அனுமதிக்கக்கூடாது என்பது உட்பட பல்வேறு உத்தரவுகளையும் பிறப்பித்தது.
தொடர் நடவடிக்கையாக, ஆணைய அதிகாரிகள், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தி, ரீல்ஸ் வெளியிட்ட தம்பதி உட்பட ஆறு பேர் மீது, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை மற்றும் ஒழுங்குப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுபோன்ற செயலில் ஈடுபடுவோர் மீது, தொடர் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, பொது பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும், வாடகை வாகனங்களில், 'ஆன்லைன்' சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்வோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையம் எச்சரித்துள்ளது.

Trending News

Latest News

You May Like