1. Home
  2. தமிழ்நாடு

அடுத்தடுத்து கார்கள், பேருந்துகள் மோதி விபத்து!

1

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூத்துக்குடி மேம்பாலம் பகுதியில் சென்னையில் இருந்து திருச்சிக்கு சென்றுக் கொண்டிருந்த கார் மீது அரசுப் பேருந்து ஒன்று மோதியது.

 இந்த விபத்தினால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அதே சாலையில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து மற்றும் நான்கு கார்கள் உள்ளிட்ட ஏழு வாகனங்கள் தொடர்ந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் ஒரு காரில் சென்ற மதுரை பொன்னாகரம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (28), இவரது மனைவி ராஜஸ்ரீ(25) மற்றும் ஸ்ரீவில்லிபுதூர் ஜோஸ்வா (22), சென்னை துரைப்பாக்கம் குமாரராஜா (28), விஜயலட்சுமி (30), நாகர்கோவில் ஆனந்த விஷ்ணு(32), சென்னை தாம்பரம் மகேஷ்குமார் (59) உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த ஏழு பேரை மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த எடைக்கல் காவல்துறையினர், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தினர். இதனால் சென்னை- திருச்சி நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

இதில் ராஜஸ்ரீ மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like