1. Home
  2. தமிழ்நாடு

சிறு கவனக்குறைவால் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார்..!

1

ம.பி விடிஷா மாவட்டத்தில் உள்ள ஹைதர்கர் கிராமத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் விவசாய நிலத்தை பார்வையிட காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு வளைவில், காரை பின்னோக்கி எடுக்க முயன்றபோது கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

swim

அந்த பள்ளம் மழைநீரால் நிரம்பியிருந்தது. இந்த விபத்தில் காரில் இருந்த ஷகீலா (30), நிகாட் (13), அயன் (10), ஷாத் (7) ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கார் பள்ளத்தில் கவிழ்ந்ததும், கிராமத்தினர் உடனடியாக விரைந்து வந்த மூன்று பேரின் உடல்களை மீட்டனர். காருக்குள் சிக்கி உயிரிழந்த ஒருவரின் உடல், மாநில பேரிடர் மீட்புப்படையால் மீட்கப்பட்டது. 

காரில் பயணம் செய்த மேலும் இருவரை கிராமத்தினர் உயிருடன் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

dead-body

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 4 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like